உதவிப்போராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் இரா. சோமசுந்தர மணிகண்டன் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கை வாசித்தார். துறைத்தலைவர், விலங்கியல் துறை மற்றும் விளையாட்டுக்குழு உறுப்பினர் முனைவர் ந. அழகுச்சாமி வாழ்த்துரை ஆற்றினார். சிறப்பு விருந்தினரான தலைவர், மதுரா பள்ளிக்குழுமம் மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்குழு உறுப்பினர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எல். நாச்சியப்பன் சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சி. ரமேஷ்கண்ணன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். இறுதியாக துறைத்தலைவர் வேதியியல் துறை மற்றும் விளையாட்டுக்குழு உறுப்பினர் முனைவர் அ. சிரில் நன்றியுரையும் நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரியின் முன்னாள் இன்னாள் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment