மானாமதுரையில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 March 2024

மானாமதுரையில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பயணியர் விடுதி அருகில் உள்ள தனியார் திருமண மஹாலில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதில் செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தனது விரிவான பதில்களை பாராளுமன்ற உறுப்பினர் பதிவு செய்தார். குறிப்பாக மத்திய பாரதிய ஜனதா அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு அவர் தனது முழுமையான மற்றும் விரிவான பதில்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு பாஜக அரசு வரி பங்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாகவும் இந்தியாவில் தனி நபர் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் போதை பொருள் அதிக கருத்து வருவதாகவும், தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தாய் மாமா கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டால்மேற்கொண்டால் மகிழ்ச்சி தான் என்றும், குறிப்பாக சிஏஏ சட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களை அச்சுறுத்தி அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும், தங்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை நிலை நிறுத்துவதற்கும் இச்சட்டத்தை ரமலான் நோன்பு தொடங்குவதற்கு முன்பாக இந்த இழிவான செயலை ஒரு தலை பட்சமாகவும், குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக ஆளும் பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்று தனது பதிலை அழுத்தமாக பதிவு செய்தார். 


தொடர்ச்சியாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விரிவான விளக்கமான பதில்களை செய்தியாளர்களிடம் அளித்தார். இதில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி, மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகத்துறை து.ஜா. பால் நல்லதுரை, மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் புருஷோத்தமன், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜீவ் கண்ணா மற்றும் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மேலும் இந்நிகழ்வில் பதிப்பு மற்றும் காட்சி ஊடகங்களை சேர்ந்த மாவட்ட மற்றும் தாலுகா செய்தியாளர்கள், மாநில மாவட்ட நகர வட்டாரங்களை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெரும் திரலாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad