காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் நிறைவு விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 March 2024

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் நிறைவு விழா.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.  கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் அரியக்குடியில் நடைபெற்ற நாட்டு நலப் பணித்திட்ட ஏழு நாட்கள் சிறப்பு முகாமின் நிறைவு விழாவில்  நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்  முனைவர்  தெய்வமணி வரவேற்புரை வழங்கினார்.     

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்  மாங்குடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி அழகப்பா அரசு கலைக் கல்லூரிக்கு சட்டமன்ற உறுப்பினராக அவரின் பங்களிப்பு பற்றியும் விளக்கிக் கூறினார்.  அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர்  முனைவர் முருகேசன்   மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். அரியக்குடி ஊராட்சி மன்றத் தலைவர்  சுப்பையா மாணவர்கள்   அரியக்குடியில் ஆற்றிய சேவை குறித்து பாராட்டினார்.


நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் லட்சுமணக்குமார்  சிறப்பு முகாம் பற்றிய   அறிக்கையை வாசித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர்  சுந்தரி நன்றி கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள்  முனைவர் சுந்தரி,  முனைவர்  தெய்வமணி, முனைவர் சித்ரா  மற்றும் முனைவர்  லட்சுமணக் குமார் ஆகியோர்   சிறப்பு முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 


- சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன் 

No comments:

Post a Comment

Post Top Ad