தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக சட்டமன்ற உறுப்பினர் திரு செல்வப்பெருந்தகை அவர்கள் பதவியேற்பு பெற்றதிலிருந்து காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி பதிவிகளில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக சிவகங்கை மாவட்ட தலைவர், மாநில மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டு மாநிலத் தலைவர் திரு செல்வப்பெருந்தகை அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மானாமதுரை நகராட்சி ஐந்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சிவகங்கை மாவட்ட இணைச் செயலாளருமான திரு எஸ். பி. புருஷோத்தமன் அவர்கள் மானாமதுரை காந்தி சிலை வளாகத்தில் உள்ள நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ஏ. சி. சஞ்சய் காந்தி மற்றும் மாவட்ட பொருளாளர் ஏ. ஆர். பி. முருகேசன் ஆகியோர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் மானாமதுரை நகர் பகுதிகளில் பதவி ஏற்பு விழாவை கொண்டாடும் விதமாக, கட்சிக் கொடியை ஏந்தியவாறு நகர் வலம் சென்றனர். இவ்விழாவை முன்னிட்டு அனைத்து நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும் புருஷோத்தமன் அவர்கள் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அவருடைய தீவிர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, நகர, வட்டார, பேரூர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment