சிவம் மார்சியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகடாமி சார்பில், சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே, தனியார் மஹாலில் மாவட்ட அளவிலான 38 வது சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மாவட்ட அளவிலான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 800 க்கும் மேற்பட்டோர் இந்த சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர்.
சிலம்பம் போட்டிகளில், சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிவம் மர்சியல் உரிமையாளர் பரமசிவம் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார். மேலும், சிலம்பம் ,கராத்தே மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment