சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்று தேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அவர்களது முயற்சியும் திறமையும் பாராட்டும் விதமாக சின் செய் காய் ஷிட்டோரியோ கராத்தே பள்ளியின் சார்பாக பயிற்சியில் கலந்துகொண்டு சிறப்பாக கற்றுத் தேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் கேடயம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பள்ளி முதல்வர், நிர்வாக இயக்குனர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் மேலும் விழாவில் கராத்தே தலைமை பயிற்சியாளர் வீரசேகரன், ஜெயபால், மெய்யப்பன், கார்த்திக், தனலட்சுமி, சந்திரசூடன், மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்.
No comments:
Post a Comment