சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி வார்டு எண் 18 ல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல்லை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் நாட்டினார். மேலும் திருப்புவனம் பேரூராட்சியில் 6 வது புதிய ஆவின் பால் பொருட்கள் நிலையத்தினையும் சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக மாவட்ட துணை செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மாவட்ட நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணியினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment