தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் மூலமாக செயல்படுத்தி வரும் இணை மானிய திட்டத்தின் மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 34 பயனாளிகளுக்கு சுமார் 15 கோடி மதிப்பிலான தொழிற்கடன் வழங்க தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் இணை மானிய திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது. இக்கூட்ட நிகழ்வில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட மற்றும் வட்டார அலுவலர்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment