காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 March 2024

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில்  இயற்பியல் துறையும், திருச்சிராப்பள்ளி ராமன் ஆராய்ச்சி அறக்கட்டளை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் பயோமீ காரைக்குடி இணைந்து  01.03.2024 மற்றும் 02.03.2024 ஆகிய இரண்டு நாட்கள் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் உயிரி மருத்துவம் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.  இதில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரவி மற்றும் பதிவாளர் செந்தில்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் இருந்து  ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வில் பன்னாட்டுக் கருத்தரங்க அமைப்புச் செயலாளர் பேரா.கருணாகரன் வரவேற்றார், துறைத் தலைவர் கவிதா கருத்தரங்கத் தலைப்பை அறிமுகம் செய்து பேசினார். கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி முன்னிலை வகித்து அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பொது நூலகத்தில் ஏராளமான தலைசிறந்த ஆய்வு இதழ்கள் உள்ளதாகவும் மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்தித்  தங்கள் ஆய்வை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா. ரவி தொடக்க உரை நிகழ்த்தினார். துணைவேந்தர் ரவி பேசுகையில் மாணவர்கள் படிக்கும் போதே ஆய்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசுக் கல்லூரியில் இது போன்று பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துவது தனக்கு மகிச்சியாக உள்ளது என்று கூறினார்.  


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியல் புல முதன்மையர் முனைவர் ராக்கப்பன் மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படித்தால் தான் ஆய்வு செய்வது அவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று தன் சிறப்புரையில் கூறினார். பேராசிரியர்கள் திருச்சி தேசியக் கல்லூரி ரவிச்சந்திரன், பூண்டி புஷ்பம் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் ரவிச்சந்திரன், கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேரா. சுப்பு நன்றி தெரிவித்தார். 


பல்வேறு பல்கலைக் கழகங்கள்  மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் பல மானவர்களும் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இந்நிகழ்வில் எத்தியோப்பியா ஜும்மா பல்கலைக்கழக பேராசிரியர் குமரேசன், சீனா நாட்டின் மரைன் கல்லூரி ஆராய்ச்சியாளர் விஜயகுமார்,  தென் கொரியா ஆசைத்தம்பி, மலாயா பல்கலைக் கழகப் பேராசிரியர் ரமேஷ் காசி மற்றும் கெளதமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தங்களது ஆய்வு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  


மேலும் காரைக்குடி சிக்ரி விஞ்ஞானிகள் முருகன், ரகுபதி மற்றும் பாண்டிகுமார், சென்னை சவீதா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செந்தில் கண்ணன், கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியின் சகாய டென்னிஸ் பாபு, அழகப்பா பல்கலைக் கழகப் பேராசிரியர் சிவகுமார் ஆகியோரும் ஆய்வாளர்களும் கலந்துரையாடினர்.  இக்கருத்தரங்கின் இரண்டாம் நாள் நடைபெற்ற நிறைவு விழாவில் பேரா. ஆசைத்தம்பி வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்ராஜன் நிறைவு விழா உரை நிகழ்த்தினார். அதில் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை  மாணவர்கள் சரியாக பயன்படுத்தி தங்களின் ஆய்வு தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 


தொடர்ந்து தமிழ் துறைத் தலைவர் முருகேசன்  இந்த கருத்தரங்கம் வாயிலாக மாணவர்கள்  அடிப்படை அறிவியல் வாய்ப்புக்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியின் முதல்வர் ராஜசேகர், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் பாஸ்கரன், பயோமீ இயக்குனர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் இறுதியில் பேரா. தெய்வமணி நன்றி கூறினார்.  நிகழ்ச்சியை மெரிட்டா ஆண்டோ பிரிட்டோ தொகுத்து வழங்கினார். 


இக்கருத்தரங்கில்  மாடர்ன் பிசிக்ஸ் புத்தக ஆசிரியர்  முருகேசன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்.

No comments:

Post a Comment

Post Top Ad