சிவகங்கை மாவட்டம் காரைக்குடி JCI காரைக்குடி கிங்ஸ் மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் காரைக்குடி குருதிப்படையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம், காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆதரவுடன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமிற்கு ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பொறுப்பு மருத்துவர் திரு.ராஜ்குமார் தலைமை தாங்கினார், முகாமை துவக்கி வைத்தவர் ஜே சி ஐ மண்டலம் 18-ன் மண்டல அலுவலர் திரு.JC.சதிஷ்குமார், காரைக்குடி கிங்ஸ் தலைவர் Jc.ராமச்சந்திரன், செயலாளர் Jc.கிருபா சத்திய சீலன், ப்ராஜெக்ட் டைரக்டர் Jc.பிரகாஷ் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர், இந்த ரத்ததான முகாமில் 30க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment