மானாமதுரை கல்கறிச்சி உயர்நிலைப்பள்ளி மாணவன் மாவட்ட ஓவியப் போட்டியில் முதலிடம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 March 2024

மானாமதுரை கல்கறிச்சி உயர்நிலைப்பள்ளி மாணவன் மாவட்ட ஓவியப் போட்டியில் முதலிடம்.


சிவகங்கை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் 2024க்கான மாவட்ட அளவிலான தேசிய மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவிய போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஜி. பாலமுருகன் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த மாணவனை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தேசிய மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் ரொக்க பரிசாக 2500 ரூபாயை பள்ளி மாணவன் பாலமுருகனுக்கு வழங்கி ஊக்கப்படுத்தினார். 

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராஜா அவர்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் சான்றிதழ் வழங்கி முதல் பரிசு பெற்ற பாலமுருகனை வெகுவாக பாராட்டினார். 

No comments:

Post a Comment

Post Top Ad