சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான பாபா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 45 ஆவது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை பள்ளியின் நிறுவனர் அம்மா பி.ராஜேஸ்வரி அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ஏ. ஆர். பி. முருகேசன், மருத்துவ அதிகாரி ஜி. ஆர். கண்ணன், மானாமதுரை இரயில்வே நிலையத் தலைவர் மற்றும் கிளை செயலாளர் மஸ்டூர் யூனியன் பி. பாலமுருகன், கனரா வங்கி பிரிவு மேலாளர் ஜி. நேதாஜி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் பள்ளியின் தாளாளர் ஆர். கபிலன், பள்ளியின் முதல்வர் ஆர். மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பிரம்மாண்ட விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாசிரியர் எம். பாண்டியம்மாள் மேற்கொண்டார். இந்நிகழ்வில் பள்ளியின் முன்னாள் இந்நாள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment