அதனைத் தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய கூடுதல் வகுப்பறைகளையும் மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கொம்புகரனேந்தல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையினையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வசந்தி சேங்கைமாறன், ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கடம்பசாமி, ஒன்றிய துணை பெருந்தலைவர் அழ. மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்பிரகாசம், லூயிஸ் ஜோசப் மற்றும் மாலதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் வான்மதி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் ரஹ்மதுல்லா கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் இணை இயக்குனர் சாந்தி, ஒன்றிய பொறியாளர்கள் கார்த்திகாயானி, உமா மகேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் ராதா சிவசந்திரன், பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கிய ராஜா, திருப்புவனம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஶ்ரீ வித்யா, பூவந்தி அரசு தலைமை மருத்துவர் சேது ராமு, கல்குறிச்சி வார்டு உறுப்பினர் திரு.பால்பாண்டி, கட்டிக்குளம் ஊராட்சிமன்ற துணை தலைவர் தமிழ்நேசன், மாவட்ட விவசாய அணி டி. ஆர். சேகர், தீர்த்தான்பேட்டை கிளை செயலாளர் சேது பாண்டி, மாவட்ட தொழிலாளர் அணி புவியரசு, மாணவரணி பாண்டியர் கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் ராமு, மகளிரணி நவநிதா மீனா, இலந்தைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மச்சக்காளை மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment