சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ உ சி நகர் மன்றம் நடுநிலைப் பள்ளியில் 58 ஆம் ஆண்டு விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக சிவகங்கை மாவட்ட செயலாளர் துணைத் தலைவர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினராக கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ உ சி நகர் மன்ற நடுநிலைப் பள்ளியில் 58 ஆண்டு விழா நடைபெற்றது. திருமதி இரா மங்களேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். இடைநிலை ஆசிரியை மு. ரம்யா தேவி பள்ளியின் ஆண்டறிக்கை வழங்கினார். நகர் மன்ற உறுப்பினர் திரு மெய்யர் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார் தமிழக வெற்றிக்கலகம் சார்பாக சிறந்த மாணவர்களுக்கு மாவட்டச் செயலாளர் ஜோசப் தங்கராஜ் துணைச் செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கேடயங்கள் வழங்கி சிறப்பித்தனர். விழாவில் மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழாவினை சிறப்பித்தனர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment