கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முன்னிலை வகிக்க, கல்லூரியின் பொறுப்பு முதல்வரும் தமிழ் துறைத் தலைவருமான முனைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு அளிப்பது பற்றிய செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய ரங்கோலி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் கல்லூரியின் வாக்காளர் எழுத்தறிவு கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியருமான முனைவர் அசோக்குமார், காரைக்குடி துணை வட்டாட்சியர் ராஜசேகரன், வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சித்ரா, முனைவர் சுந்தரி, முனைவர் தெய்வமணி, முனைவர் லக்ஷ்மணகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்.
No comments:
Post a Comment