தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சார்பாக தென்காசியில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 85 மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இச்சாதனையில் சிவகங்கை மாவட்ட செயளாலர் யோகா ஆச்சாரியார் பூ. புவனேஷ் அவர்கள் இணைந்து வழிநடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு யோகா பெடரேஷன் பொதுச்செயலாளரும், இந்தியன் யோகாசன ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் தேசிய செயலாளர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட யோகா மாஸ்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. மேலும் 2024 ஆம் ஆண்டிற்க்கான யோகா ஆச்சாரியா சிவகங்கை மாவட்ட செயலாளர் பூ. புவனேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தண்ணீரின் அவரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலையில் டம்ளரில் தண்ணீர் வைத்தபடி யோகாசனம் செய்தது இந்நிகழ்வில் குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment