சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களின் மகள் அதிதி நளினி சிதம்பரத்தின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் சார்பாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ஊக்க தொகையாக 15,000 ரூபாய் மற்றும் பள்ளிக்கு வைப்புத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய்காந்தி அவர்கள் தலைமையாசிரியை அவர்களிடம் வழங்கினார். இந்த வைப்புத் தொகையிலிருந்து வரும் நிதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிக்கு பரிசாக கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற ஊக்கத்தொகையினை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் இந்த வருடம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 ஆம் ஆண்டு முதல் மதிப்பெண் எடுத்த தர்ஷினி என்ற மாணவிக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 6750 மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி அவர்கள் வழங்கினார்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் வழங்கப்படும் ஊக்கத்தொகையை பொதுமக்களிடம் சென்று சேர்க்கும் விதமாக மானாமதுரை நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமாக வழங்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் மானாமதுரை நகராட்சியில் நிறைவு பெற்ற பணிகள் மற்றும் அமைக்கப்பட உள்ள பணிகள் குறித்தும் பொதுமக்களின் கவனத்திற்காக அச்சிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகத்துறை திரு து.ஜா. பால்நல்லதுரை மற்றும் மாவட்ட இணை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் புருஷோத்தமன் ஆகியோரின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment