சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கன்னார் தெருவில் மானாமதுரை நகர நாம் தமிழர் கட்சி சார்பாக 'கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்' நடைபெற்றது. இதில் மாவட்ட வழக்கறிஞர் பாசறை இணைச் செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவரங்காடு கார்த்திக்ராஜா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து தொகுதி கொள்கை பரப்புச் செயலாளர் பா. முத்துகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
மேலும் தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகள் அனைவரும் வீர உரையாற்றி அமர்ந்தனர். இந்நிகழ்வில் மானாமதுரை நகர ஒன்றிய பேரூர் ஊராட்சி தலைவர்கள், செயளாலர்கள், நிர்வாகிகள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment