இதில் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஆஷா அஜீத், திட்ட இயக்குநர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயளாலர் த. சேங்கைமாறன், நகர் கழக செயலாளர் பொன்னுசாமி, வட்டாட்சியர் ராஜா, ஒன்றிய கழக செயலாளர்கள் துரை. ராஜாமணி, அண்ணாத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சுப்பிரமணியன், ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, துணை பெருந்தலைவர் முத்துசாமி, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பாலசுந்தர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.ஜெயமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மலைச்சாமி, ராதா ரவிச்சந்திரன், மீனவர் அணி பாஸ்கரன், கட்சி நிர்வாகிகள் சிவாஜி, முன்னாள் கவுன்சிலர் முனியசாமி, கவுன்சிலர் பால்பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், கொன்னக்குளம் கண்ணன், மாணவரணி கார்த்திக் மற்றும் சீனுகுட்டி, இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், 7 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மாரிகண்ணன், கிழக்கு ஒன்றிய துணை செயளாலர் தனசேகரன், மேற்கு ஒன்றிய துணை செயளாலர் ராமகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய அவை தலைவர் அங்குசாமி, மேலப்பசலை சடையப்பன், கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அழகு சுந்தரம், அய்யங்காளை, கள்ளர்வலசை நெடுஞ்செழியன், திருப்புவனம் - பாலகிருஷ்ணன், தேளி கோபால், அரசு துறை அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் செய்களத்தூர் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாணவ மாணவியரின் நலன் கருதி 'அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்' சுமார் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ச்சியாக மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் மற்றும் ராஜகம்பீரம் ஆகிய ஊராட்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நியாய விலைக் கடையையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment