காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி ஆகியோர் முன்னிலை இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்கள் பின்வருமாறு, முதல் தீர்மானம் 2024ல் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக அமர்த்திட வேண்டும். இரண்டாவது தீர்மானம் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்று வெற்றி பெற பாடுபட வேண்டும். மூன்றாவது தீர்மானமாக சிவகங்கை பாராளுமன்ற தொகுதியினை மீண்டும் மாண்புமிகு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களுக்கு பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உழைத்திட வேண்டும், ஆகிய இம்மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில,மாவட்ட, நகர, வட்டார, மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment