நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கான தேசிய அளவிலான தேசிய ஒருங்கிணைப்பு முகாம் மதுரையில் உள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பாக, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சித்ராவால் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இரண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கணிதத்துறை மாணவி அகல்யா, வரலாற்றுத் துறை மாணவர் வருண்குமார் ஆகியோரை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ரவி, அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீனிவாசன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி முனைவர் தெய்வமணி, முனைவர் லக்ஷ்மணகுமார், முனைவர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பாராட்டினர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment