மானாமதுரை ஒன்றியங்களில் உள்ள பல பகுதிகளில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் கள ஆய்வு பணி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 February 2024

மானாமதுரை ஒன்றியங்களில் உள்ள பல பகுதிகளில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் கள ஆய்வு பணி.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புதிய திட்டமான "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இ.ஆ.ப மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் ஆகியோர் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட புளிக்குளம் மாட்டின ஆராய்ச்சி மையத்தில் மாடுகள் வளர்ப்பு பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். 


அடுத்ததாக மிளகனூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அங்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை உறுதிப்படுத்தனர். தொடர்ச்சியாக மிளகனூர் ஊராட்சியில் உள்ள கழங்குமடை பெரியகண்மாய் ஆய்வு படுத்தப்பட்டது. பின்னர் கட்டிக்குளம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் தடுப்பு அணை குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். 

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் இ.கா.ப, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தர், ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கிளை கழக செயலாளர் ரெத்தினம், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad