சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒ.வெ.செ பள்ளியில் வீரவிதை சிலம்பம் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மானாமதுரையில் இயங்கி வரும் வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளி சார்பாக கலந்து கொண்ட மாணவர்களில் மாணவி கண்மணி முதல் பரிசையும், சான்விகா, கவின்பாலா, தருணிகா, தேவிகா ஆகியோர் 2-வது பரிசையும், ஷியமளா, திவேஷ் நாராயணன், சஞ்சிதா ஸ்ரீ, அஷ்வின், சகாப்தன், ஆதிஷ், பிரணவ் ஆகியோர் 3-வது பரிசையும் பெற்றனர்.
பள்ளியின் சார்பாக போட்டியில் கலந்துகொண்ட 13 மாணவர்களும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். அவர்களை வழிநடத்தி சென்ற ஆசிரியை திருமதி நாகஜோதி அவர்களுக்கும், பயிற்சியாளர் மாஸ்டர் பெருமாள் அவர்களுக்கும், வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் நிறுவனர் திரு ராஜ்குமார் அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment