பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 February 2024

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களின் அரசாணை உத்தரவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அதனைத் தொடர்ந்து மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் திரு ராஜகண்ணப்பன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கடி நாட்டினார்.

 
மேலும் இந்நிகழ்வில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு. மாணிக்கம், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி  நிர்வாகிகள், சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad