சிவகங்கையில் மாவட்டத்தில் 27.01.2024 முதல் 06.02.2024 வரை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே பல்வேறு வகையிலான போட்டிகள் நடைபெற்றன. அப்போட்டிகளில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
வினாடி வினா போட்டியில் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி பவித்ரா மற்றும் முதுகலை வரலாறு முதலாமாண்டு மாணவி காவியா முதல் பரிசினைப் பெற்றனர்
பேச்சுப் போட்டியில் வணிகவியல் முதலாமாண்டு மாணவி சாருமதி இரண்டாம் பரிசும்,பல குரல் போட்டியில் இரண்டாமாண்டு முதுநிலை வேதியியல் துறை மாணவர் சிவக்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர். முதுகலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி பவித்ரா ஹைக்கூ கவிதை போட்டியில் முதல் பரிசும் கழிவுகளிலிருந்து கலைப் பொருட்கள் தயாரித்தல் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றார்.
பரிசு பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவ மாணவிகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ், உறுப்பினர்கள் முனைவர் செல்வ மீனா, பேராசிரியர் ஷர்மிளா, முனைவர் லட்சுமணக் குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment