தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்த அரசு ஆணையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் இரு நுழைவு வாயில்கள் மற்றும் இரு மண்டபங்கள் அமைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் திரு ராஜகண்ணப்பன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் மானாமதுரை தொகுதி பொதுமக்களின் சார்பாக விழாவில் பங்கேற்று அடிக்கடி நாட்டினார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன்,
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப,
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர்
முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவாஸ் கனி,
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு. மாணிக்கம், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment