சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மானாமதுரை - தாயமங்கலம் செல்லும் பிரதான சாலையில் தெற்கு நோக்கி அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி நம்பி நாகம்மாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாகம் மேற்கொண்டு வந்த நிலையில் நான்காம் நாளான வியாழக்கிழமையன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேக விழாவில் கோயில் நிர்வாகியும் பூசாரியுமான திரு ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை ஏற்க, சிவாச்சாரியார் மணிகண்ட சுவாமிகள் முன்னிலை வகிக்க அனைத்து பரிவார தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆகம விதிகளின்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மானாமதுரை பாஜக நகரச் செயலாளர் நமக்கோடி அவர்கள் பங்கேற்றார். மேலும் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தகோடி பெருமக்கள் நூற்றுக்கணக்கானோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment