மானாமதுரை நகராட்சியில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணியினை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்த முதல்வர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2024

மானாமதுரை நகராட்சியில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணியினை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்த முதல்வர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2023-2024 கீழ் ரூபாய் 38.86 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். 

இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், நகர் கழக செயலாளர் பொன்னுச்சாமி, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி, வட்டாட்சியர் ராஜா, நகர் மன்ற துணை தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, மேற்கு ஒன்றிய கழக செயளாலர் ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாத்துரை, அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் ஜெயமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மேலும் நகர் மன்ற உறுப்பினர்கள் 1 வது வார்டு தேன்மொழி விஜயகுமார், 2 வது வார்டு இந்துமதி திருமுருகன், 5 வது வார்டு புருசோத்தமன், 6 வது வார்டு சன்முகப்பிரியா, 7 வது வார்டு மாரிகண்ணன், 13 வது வார்டு மணிமேகலை செந்தில், 14 வது வார்டு சோமசதீஸ், 16 வது வார்டு காளீஸ்வரி அழகுசுந்தரம், 17 வது வார்டு பாலாஜி, 18 வது வார்டு ராஜேஸ்வரி ராஜேந்திரன், 19 வது வார்டு லட்சுமி சங்கிலி, 20 வது வார்டு சத்தியா தர்மா, 21 வது வார்டு செல்வகுமார், 23 வது வார்டு  சித்ரா மன்னர் மன்னன், 24 வது வார்டு வேல்முருகன், 25 வது வார்டு நாகஜோதி மணி, 26 வது வார்டு அழகர்சாமி, நகர அவைத்தலைவர் ரவி, மாவட்ட பிரதிநிதி திருமுருகன், காளியப்பன், மீனவரணி பாஸ்கரன், தொண்டரணி மூர்த்தி, மாணவரணி கார்த்திக், கலை இலக்கிய பிரிவு மோகன சுந்தரம், வழக்கறிஞர் நாகராஜ், எம். எம். ராசு, அதியமான், மாங்குளம் தேசிங்கு ராஜா, முன்னாள் கவுன்சிலர் கணேசன், கீழப்பசலை சிவா, அன்னவாசல் சண்முகம் அரசு துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad