மானாமதுரை கிழங்காட்டூரில் பம்பு மோட்டார் பழுது, பேனல் போர்டில் மின் கசிவு, பொதுமக்கள் அச்சம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 February 2024

மானாமதுரை கிழங்காட்டூரில் பம்பு மோட்டார் பழுது, பேனல் போர்டில் மின் கசிவு, பொதுமக்கள் அச்சம்.


சிவகங்கை மாவட்டம் மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட கிழங்காட்டூரில், அருள் புஷ்பம் க/பெ லெட்சுமணன் 1வது வார்டு உறுப்பினர் அவர்கள் மானாமதுரை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, "கிழங்காட்டூர் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அருகில் உள்ள சிறு மின்விசை பம்பு மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. அதனை சரி செய்துதர பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

மேலும் பேனல் போர்டு பழுதாகி இருப்பதால் தொட்டால் மின்சாரம் பாய்கிறது, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது. இதனை சரி செய்து தரும்படி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒன்றுக்கு பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்க முன்வரவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் உடனடியாக தலையிட்டு இதனை சரி செய்து அசம்பாவிதங்களை தடுத்திட முன்வர வேண்டும்" என கோரிக்கை வைத்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad