சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நீரதலமுடைய அய்யனார் சோணையா சுவாமி திருக்கோயில் 68 ஆம் ஆண்டு வருடாந்திர தை மாத பொங்கல் பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அருள்மிகு ஶ்ரீ சோனையா சுவாமிக்கு மலர் மாலைகளால் அலங்காரம் செய்ய, சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் சங்க தலைவர் மற்றும் 9 வது வார்டு பா.ஜ.க கிளை தலைவர் எஸ். சன்முகம் (எ) மாரியப்பன் அவர்களின் முன்னிலையில் சங்க உறுப்பினர்களோடு மண்டகப்படி நடைபெற்றது.
மேலும் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு வைகை ஆற்றில் அமைந்துள்ள எம். கே. தியாகராஜ பாகவதர் அரங்கில் 'ஸ்ரீ வள்ளி திருமண' நாடகமும் நடைபெற்றது. இவ்விழாவின் தொடர்ச்சியாக சனிக்கிழமை மாலை 7 மணிக்கு குதிரை வாகன அலங்காரதுடன் பொங்கல் பூஜை விழாவும் நடைபெறும். இவ்விழாவிற்கு மானாமதுரை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பக்த கோடி பெருமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment