சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி ராஜீவ் காந்தி நகரில் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான ஊராட்சி நிதியில் இருந்து ரூபாய் 17.76 மதிப்பீட்டில் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் கட்டிடத்தினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட அரசு வழக்கறிஞர் எல். பாலசுப்ரமணியன், சாக்கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.எம்.கே. சொக்கலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் எம். தேவி மாங்குடி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செங்கோல், கணபதி, குழந்தை தெரசா, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment