இலுப்பைக்குடி கிராமம் புதுக்குடியிருப்பு மக்கள் சார்பில் மயானத்தை மீட்டு தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 February 2024

இலுப்பைக்குடி கிராமம் புதுக்குடியிருப்பு மக்கள் சார்பில் மயானத்தை மீட்டு தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.


சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி வட்டம், இலுப்பைக்குடி ஊராட்சி, பொதுமக்கள் கூருகையில்: இலுப்பைக்குடி கிரமத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டியல் பறையர் வகுப்பை சார்ந்த சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

எங்களது பட்டியல் பறையர் இன மக்கள் சமூகத்தில் இறந்தவர்களை புதைப்பதற்கான மயானமாக சுமார் 1/2 அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேவகோட்டை வட்டம், உஞ்சனை வருவாய் கிராமம் புல எண்: 443/1 பழைய புல எண்: 442/1 விஸ்தீரணம் 0.83.00 புஞ்சை நிலத்தை கடந்த சுமார் 100 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். மேற்படி இந்த இடம் வருவாய் ஆவணங்களில் பொது மயானம் என்று குறிப்பிடபட்டுள்ளது. எங்களது பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மேற்கண்ட இடத்தில் புதைத்து வந்துள்ளோம்.


வீராச்சாமி மனைவி காந்திமதி என்பவரை மேற்படி மயானத்தில் புதைத்து உள்ளோம். இந்த விவரங்கள் சம்மந்தபட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தெரியும். இந்த மயான இடத்தை முறைகேடாக வருவாய்துறையினர் செல்வம் என்பவரின் மனைவி சாந்தி என்பவரின் பெயரில் சட்டவிரோதமான பட்டா வழங்கி உள்ளனர். மேற்படி பட்டாதாரர் ஆன செல்வம் மனைவி சாந்தி மேற்படி மயான இடத்தை சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து அடியாட்களை கொண்டு வந்து ஆக்கிரமிப்பு செய்வதும், அதை நாங்கள் தடுப்பதும் என பிரச்சனைகள் வாடிக்கையாக நடைப்பெற்று வருகிறது. இது குறித்து நாங்கள் பலமுறை சம்மந்தபட்ட வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை மேற்படி பட்டா எண் 1144 பட்டாதாரர் செல்வம் மனைவி சாந்தி எங்கள் பகுதியை சார்ந்தவரும் இல்லை மேற்படி நபர் வசதி படைத்த வேற்று  சாதி இனத்தை சேர்ந்தவர். எதையும் துணிந்து செய்யக்கூடியவர் என்பதால் எங்களுக்கும் மேற்படி நபருக்கும் எந்த நேரத்திலும் மோதல் ஏற்பட்டு அதனால் பொது அமைதி கெடும் ஆபத்தான சூழல் உள்ளது.


இடத்தை முறைகேடாக செல்வம் மனைவி சாந்தி பெயருக்கு வழங்கப்பட்ட பட்டா எண்: 114-4 ஐ ரத்து செய்து மயானத்தை மீட்டு தரக்கோரி இலுப்பைக்குடி கிராமம் பட்டியல் பறையர் இன பொதுமக்கள் சார்பாக காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கிராமத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad