சிவகங்கை நகர் பகுதியில் புதன்கிழமையான இன்று சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அவர்களின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய்காந்தி அவர்களின் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்தும், காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் உள்ள விலைவாசி உயர்வு குறித்த ஒப்பீட்டு பட்டியலை பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் மூலமாக பிரச்சாரங்களும் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட நகர வட்டார பேரூர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸை சேர்ந்த நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment