சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் உள்ள ஏம்பல் மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஏம்பல் முதல் ஜெயங்கொண்டான், புதுவயல், காரைக்குடி வழியாக மதுரைக்கு புதிய பேருந்து போக்குவரத்து சேவையை புதுவயல் பேருந்து நிலையத்தில் இருந்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து கழக பொது மேலாளர், அரசு வழக்கறிஞர், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், ஏம்பல் வட்டார வளர்ச்சி குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment