சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சமுதாய பண்ணை பள்ளி இயங்கி வருகிறது. இப்பண்ணை பள்ளி உறுப்பினர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் குன்றக்குடியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' மூலம் அசோலா மற்றும் மண்புழு உரங்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேராசிரியர் டாக்டர் திரு ராமகிருஷ்ணன், வட்டார அணி தலைவர் திரு செந்தில்குமார், திட்ட செயலர் திரு விக்னேஷ்வரன், தொழில் முனைவோர் மேம்பாட்டு அலுவலர் விக்ரம், தொழிற்சார் சமூக வல்லுனர்கள் காந்திமதி, கௌசல்யா, தீபிகா, சீதா, பாலா, ஜெயப்ரியா, கோகிலா, முருகேஸ்வரி, சரண்யா மற்றும் சமுதாய பண்ணை பள்ளி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment