சிவகங்கை மாவட்ட காவல்துறையின் சிறப்புப் பணி பயன்பாட்டிற்காக மதுரை சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பாக முதன்முறையாக நடமாடும் அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட டெம்போ வாகனத்தை ரோந்து மற்றும் இன்னும் பிற துறை சார்ந்த பணிகளுக்கு காவல்துறையினர் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறைத்துறையின் தலைமை இயக்குனர் மகேஸ்வரன் தயாள் அவர்கள் தெரிவித்த செய்தி குறிப்பில், சிவகங்கை மாவட்டம் போக இன்னும் சில மாவட்ட காவல்துறையினருக்கும் இது போன்ற சிசிடிவி மற்றும் மேம்பாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் பிற மாவட்டங்களான ராமநாதபுரம் திண்டுக்கல் விருதுநகர் தேனி போன்ற மாவட்ட காவல்துறைக்கு தேவைப்படும் பட்சத்தில் இதே போன்ற வசதிகள் செய்து தர சிறைத்துறை நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment