நடந்து முடிந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் சிவகங்கை மேல வாணியங்குடியில் உள்ள தனியார் பள்ளியான அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் பதின்ம மேல்நிலைப்பள்ளியின் மாணவி ஹாசினி காந்தி இக்கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பங்கேற்ற நிலையில், தன்னுடைய தனித்துவமான திறமையின் வெளிப்பாடாக முதல் பரிசை வென்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு கராத்தே ஆசிரியர் பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை முதலானவற்றை வழங்கி தன் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் பதின்ம மேல்நிலைப்பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவி ஹாசினி காந்திக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment