கீழப்பசலை கிராம வேளாண்மை கூட்டுறவு வாங்கியில் 500 பவுன் தங்க நகைகள் கையாடல், காவல் ஆய்வாளரிடம் மனு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2024

கீழப்பசலை கிராம வேளாண்மை கூட்டுறவு வாங்கியில் 500 பவுன் தங்க நகைகள் கையாடல், காவல் ஆய்வாளரிடம் மனு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கீழப்பசலை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இக்கூட்டுறவு வாங்கியில் பொதுமக்களால் கடனுதவி போன்றவற்றிற்காக செலுத்தி வைக்கப்பட்ட சுமார் 500 பவுன் எடையுள்ள தங்க நகைகளை சில நாள்களுக்கு முன்பு வங்கி கிளை நிர்வாகத்தால் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வாங்கி கையாடலில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். 

எனவே இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் கொடுத்து தெரியப்படுத்தியதை அடுத்து, இப்புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக மானாமதுரை நகர் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ் தலைமையிலான சார்பு ஆய்வாளர் ராமசந்திரன் மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மனுக்கள் வாங்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad