சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மற்றும் சந்தை பகுதிகளில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்களின் உத்தரவின் பேரிலும், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இதில் கடந்த பத்தாண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் பொதுமக்களை நேரடியாக பாதிப்படைய செய்யும் வகையில் விண்ணை தொடும் அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறித்த பட்டியலை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோருக்கு துண்டு பிரசுரம் மூலமாக விளக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது விலைவாசியானது சிறு குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரடியாக பன்மடங்கு பாதிப்படைய செய்வதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் துண்டு பிரசுர விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை வஞ்சிக்கும் பாசிச பாஜக அரசை வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முழுமூச்சாக மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவும் அளித்து வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகத்துறை திரு து.ஜா. பால் நல்லதுரை அவர்களின் தலைமையிலும், மாவட்ட தொழிலாளர்கள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட நகர வட்டார பேரூர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment