இந்த கருத்து கேட்பு கூட்டத்தின் போது அனைத்து தரப்பினரும் ஒருமானதாக இந்த ஆலை வரக்கூடாது என்று கருத்து தெரிவித்தனர். தப்பித்தவறி ஆலை வந்தால் புற்றுநோய் சிறுநீரக நோய், தோல் நோய் உள்ளிட்ட பல விதமான நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அச்சம் தெரிவித்தனர். உதாரணம் விருதுநகர் மாவட்டம் முக்குலத்தில் இதே போன்ற தொழிற்சாலை அமைத்ததால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு 160 அப்பாவி பொதுமக்கள் இறுந்துள்ளதாகவும் தங்கள் கருத்தை அழுத்தமாக தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டத்திற்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத வட மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளியூரைச் சேர்ந்த நபர்களும் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள்.
ஆலைக்கு ஆதரவாக ஆலை நிர்வாகம் தங்களின் ஆட்களை கூட்டி வந்ததாக தெரியவந்ததையடுத்து, கருத்து கேட்பு கூட்டத்தின் மத்தியில் இரு தரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக காவல்துறையினர் கருத்து கேட்பு கூட்டத்தில் நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்து முறைகேடாக கருத்துக்களை அநாகரிகமான பதிவு செய்த நபர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment