பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் அவர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்கினார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 February 2024

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் அவர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.


தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த தனது விஜய் மக்கள் இயக்கம் எனும் இயக்கத்தை தனது நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மூலம் நடத்தி அதன்மூலம் பொதுமக்களுக்கு சேவை மற்றும் தொண்டாற்றி வந்தார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனது இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் மக்கள் பிரதிநிதிகளாக வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் இன்று தனது இயக்கத்தை மாற்றியமைத்து புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்து இருக்கிறார். தான் புதிதாக ஆரம்பித்துள்ள கட்சியின் பெயர் 'தமிழக வெற்றி கழகம்' விஜய் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, சிவகங்கை மாவட்ட இளைஞரணி சார்பில் காரைக்குடி நகர்புற பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதில் காரைக்குடி நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள், இயக்கம் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொண்டாடினர்.

No comments:

Post a Comment

Post Top Ad