சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஶ்ரீ தியாக விநோத பெருமாள் திருக்கோவிலில் சோபகிருது தை மாதம் வெள்ளிக்கிழமையான நேற்று மகா 'குத்து விளக்கு பூஜை' நடைபெற்றது. இந்த குத்து விளக்கு சிறப்பு பூஜையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகளில் விளக்கேற்றிய பெண்கள், பூஜையில் மந்திரங்கள் உச்சரித்தும், பாடல்கள் பாடியும் வழிபாடு மேற்கொண்டனர்.
பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் ஏ.ஆர். ஜெயமூர்த்தி, அறங்காவலர் ரா. கார்த்திக், அறங்காவலர்கள் க. ராமலட்சுமி மற்றும் மு. சங்கிலி, திருக்கோயில் பணியாளர் சரவணன், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment