பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ176 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நான்கு ஆய்வகக் கட்டடங்களின் திறப்பு விழா இன்று கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வரவேற்றார்.தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் கலந்துகொண்டு புதிய ஆய்வகக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி நகர மன்ற துணைத் தலைவர் குணசேகரன், தமிழ் துறைத் தலைவர் முனைவர் முருகேசன் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோமளவள்ளி, புவியமைப்பியல் துறைத் தலைவர் முனைவர் உதய கணேசன், கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சந்திரசேகரன், உதவி செயற்பொறியாளர் பாஷ்யம் மற்றும் பேராசிரியர்களும், ஆசிரியரல்லாப்பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment