சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் யூத் ரெட் கிராஸ் அமைப்புகளும் காரைக்குடி அரசு ரத்த வங்கியும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ் துறைத் தலைவர் முனைவர் முருகேசன் மற்றும் காரைக்குடி அரசு ரத்த வங்கியின் மருத்துவர் அருள்தாஸ் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி, முனைவர் தெய்வமணி, முனைவர் சித்ரா, முனைவர் லட்சுமணக்குமார்,யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் பாரதிராணி, காரைக்குடி குருதிக்கொடையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 56 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment