சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஆண்டாள் அழகர் என்னும் தனியார் திருமண மஹாலில் செவ்வாய்க்கிழமை மாலை நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி வி. எழிலரசி விசயேந்திரன் அவர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் எழிலரசி அவர்களுடன் கட்சியினர் கலந்துரையாடினர்.
மேலும் பாராளுமன்ற தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணிகள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் மேற்கொண்டனர். அனைத்து நிர்வாகிகளின் கருத்துக்களையும் வேட்பாளர் எழிலரசி அவர்கள் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் ஊராட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment