சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கிரிக்கெட் அணியினர் வெற்றி .அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தால் நடத்தப்பட்ட 12 வது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியானது அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி வளாக கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகள் கலந்து கொண்டதில், கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினர்.
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர். முருகேசன், உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினர்.
-மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment