சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 318 அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணவிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் வழங்கினார். முன்னதாக தமிழக முதல்வர் அவர்களின் திட்டமான "இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" குறித்து மானாமதுரை நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் சென்று திமுக சாதனை பட்டியலை துண்டு பிரசுரம் மூலமாக எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நகர் கழக செயளாலர், நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன், நகர் கழக துணை செயலாளர் மன்னர் மன்னன், 2 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி திருமுருகன், நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி, பள்ளி தலைமை ஆசிரியர் பேப்லிட், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வளர்மதி, இளைஞர் அணி கிழக்கு ஒன்றியம் வேங்கை சுந்தர், எஸ். காரைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டி, ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப்ரஹ்மான், பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment