தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பாக மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டிற்கான பல்வேறு வகையான பத்துப்போட்டிகள் கொண்ட இளைஞர் இலக்கியத் திருவிழா - 2024 காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நுண்கலை மன்றத்தால் நடத்தப்பட்டது. அனைத்துப் போட்டிகளிலும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றனர்.
பேச்சாற்றல் போட்டியில் முதல் மூன்று பரிசுகளை முறையே பிரியதர்ஷினி, ஆர்த்தி, மாதரசி, நூல் அறிமுகப் போட்டியில் சார்மதி, பவித்ரா, தையல்நாயகி, இலக்கிய வினாடி வினாப் போட்டியில் அன்னபூரணி, அந்தோனி சந்தான மேரி, பிரியதர்ஷினி, உடனடி ஹைக்கூ போட்டியில் பவித்ரா, நவீன் ராஜ், அன்னபூரணி, ஓவியப்போட்டியில் நீதி ராணி, ஹரிஹரசுதன், சுபிக்க்ஷா , விவாத மேடைப் போட்டியில் விதுஷா, மாதரசி, கார்த்திகா, பேச்சுப் போட்டியில் பவித்ரா, அபிநயா, ஆர்த்தி படத்தொகுப்பு உருவாக்கப் போட்டியில் கார்த்திகை முத்து, குளோரோபில் பேகம், ஹரிஹரசுதன், புத்தக மதிப்புரை போட்டியில் அன்னபூரணி, அபிராமி, குளோரோபில் பேகம் மற்றும் ப்ராம்ட் இன்ஜினியரிங் போட்டியில் பவித்ரா, சுபாஷ்டின் நிஷாந்த், கார்த்திகேயன் ஆகியோர் பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களுடன் , முதல் பரிசாக தலா 5000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 4000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 3000 ரூபாயும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற மாணவ மாணவிகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ், உறுப்பினர்கள் முனைவர் செல்வமீனா, பேராசிரியர் ஷர்மிளா, முனைவர் லட்சுமணக் குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.
No comments:
Post a Comment