அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ஸ்வயம் பாடம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 17 February 2024

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ஸ்வயம் பாடம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ஸ்வயம் பாடம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற  இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முருகேசன் தலைமை வகித்து ஸ்வயம் பாடத்தின் நோக்கம் குறித்து பேசினார். 

கல்லூரியின் ஸ்வயம் பாட  ஒருங்கிணைப்பாளரும், புவியமைப்பியல் துறைத் தலைவருமான முனைவர் உதய கணேசன் வரவேற்புரையாற்றி ஸ்வயம் பாடம் மாணவர்களுக்கு ஏன் அவசியம் என்று எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினரும் சேலம் அரசு கலைக் கல்லூரியின் புவியமைப்பியல் துறை இணைப் பேராசிரியருமான முனைவர் விஜயக்குமார் பல்கலைக்கழக மானியக்குழு அறிமுகப்படுத்தியுள்ள ஸ்வயம் பாடத்தின் முக்கியத்துவம் குறித்தும் தலைசிறந்த கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட பாடங்களை,  இணைய வசதியால் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் கற்றுக்கொள்ள முடியுமென்றும், அதைக் கற்பதால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். 


தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் சிதம்பரம் நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

1 comment:

  1. Great Prestigious College... Enthusiastic Staff and Students...Kudos to all💐💐💐💐💐

    ReplyDelete

Post Top Ad