அழகப்பா அரசு கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் போதை ஒழிப்பு மற்றும் தொழில் திறன் வளர்ச்சி (Skill Development) விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 January 2024

அழகப்பா அரசு கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் போதை ஒழிப்பு மற்றும் தொழில் திறன் வளர்ச்சி (Skill Development) விழிப்புணர்வு பேரணி.


தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு காரைக்குடி, அழகப்பா அரசு கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் போதை ஒழிப்பு மற்றும் தொழில் திறன் வளர்ச்சி (Skill Development) விழிப்புணர்வு பேரணி சென்றனர். காரைக்குடி ஆரிய பவனில் இருந்து அழகப்பா கல்லூரி வரை நடைபெற்ற இப் பேரணியை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர்.  பாரதி, காரைக்குடி 9 பெட்டாலியன் நைட் சுபேதார் வேல்முருகன் ஹவில்தார் மகேஸ்வரன், காரைக்குடி வடக்குக் காவல் சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர் முனைவர்  பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆரியபவன் சந்திப்பில் துவங்கிய  இப்பேரணி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முடிவு பெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad